இஸ்ரோ விஞ்ஞானிகள் சாம்பியன்கள் : பிரதமர் மோடி பாராட்டு

8 September 2019, 6:26 am
modi
Quick Share

இஸ்ரோவையும் விளையாட்டு வீரர்களையும் ஒப்பிட்டு பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரோவின் சந்திரயான் 2 முயற்சியைப் பாராட்டி விளையாட்டு வீரர்கள் பலரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.

அந்த வரிசையில் டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதி தனது ட்விட்டரில், வாழ்த்துகள் இஸ்ரோ. இது உங்களை இன்னும் வேகமாக செயல்பட உந்தும். உங்களால் தேசம் பெருமிதம் கொள்கிறது. ஜெய் ஹிந்த்” எனப் பதிவிட்டிருந்தார்.

மகேஷ் பூபதியின் ட்வீட்டை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, “இஸ்ரோவும், இந்திய விளையாட்டு வீரர்களும் சாம்பியன்கள். இவர்களுக்கு தோல்வியே இல்லை. சறுக்கல்கள் எல்லாம் படிப்பினை மட்டுமே” எனப் பதிவிட்டுள்ளார்.