உத்தர்காசியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி..மீட்பு பணிகள் தீவிரம்…!!

19 July 2021, 12:10 pm
Quick Share

உத்தர்காசி: உத்தர்கண்ட் மாநிலம் உத்தர்காசியில் சூறைக்காற்றுடன் திடீரென பெய்த பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சூறைக்காற்றுடன் திடீரென பெருமழை பெய்தது. இதன் காரணமாக ஓரிரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர். பலர் இந்த நிலச்சரிவில் சிக்கி தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலச்சரிவில் மாண்டோ கிராமத்தில் இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் குழந்தைகள் , பெண்களும் சிக்கி இருப்பதாக மாநில பேரிடர் மீட்பு இன்ஸ்பெக்டர் கூறினார்.

மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உத்தரகாசி மாவட்டத்தில் மாண்டோ கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். மற்றும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

இறந்தவர்கள் மாதுரி (42) மற்றும் ரிது (38) ஆகிய இரு பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஆறு வயது குழந்தை இஷுவும் உயிரை இழந்துள்ளதாக மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 57

0

0