கமல்ஹாசனுக்கு ஒடிஷா பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம்

18 November 2019, 11:17 pm
kamal meets odisha CM
Quick Share

ஒடிசா : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒடிஷா பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு இதுவரை கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பிரான்ஸ் அரசின் செவாலியே உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.இந்நநிலையில் ஒடிசா மாநில செஞ்சுரியன் பல்கலைகழகம் கமல்ஹாசனுக்கு இரண்டாவது முறையாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. நாளை நடைபெறும் விழாவில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.இந்நிலையில், ஒடிசாவிற்கு சென்றுள்ள கமல்ஹாசன் அம்மாநில முதல்வர் நவின் பட்நாயக்கைச் சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மிகப் பெரும் பின்னணியைக் கொண்ட அவரைத் தொடர்ந்து கவனித்துவருவதாகவும், அவரிடமிருந்து வரும் அறிவுரை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.