டெல்லியில் தொழிற்சாலையில் தீவிபத்து : தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள் படுகாயம்

4 November 2019, 8:59 am
fire -updtenews360
Quick Share

டெல்லியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.

தலைநகர் டெல்லியில் பீராகார்ஹி பகுதியில் 4 அடுக்குகளை கொண்ட தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.முதலில் ஒருபுறம் பற்றிய இந்தத் தீ, பிறகு, கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. பின்னர், இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தப் பணியின் போது 3 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், எஞ்சிய வீரர்கள் தீயை அணைத்தனர்.

1 thought on “டெல்லியில் தொழிற்சாலையில் தீவிபத்து : தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள் படுகாயம்

Comments are closed.