மீண்டும் ஆரம்பித்த டாம் & ஜெர்ரி சண்டை! – நாராயணசாமி மீது கிரண் பேடி புகார்!!

8 November 2019, 6:42 pm
Krian NArayna - UpdateNews360
Quick Share

உரிய அனுமதிபெறாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீது அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சிங்கப்பூர் சென்று தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலீட்டாளர்களை சந்தித்துள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி, சிங்கப்பூருக்கு தனிப்பட்ட முறையில் பயணம் செய்வதாகத் தெரிவித்துவிட்டு அரசுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, வாட்ஸ்-அப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடம் உரிய அனுமதி பெற்று முதலமைச்சர் மற்றும் அமைச்சர் வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ள கிரண்பேடி, நாராயணசாமி மீது மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளார்.