பெங்களூரு: கர்நாடகாவில் கல்குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகர்த்த போது, பாறைகள் உருண்டு 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவிலுள்ள சாம்ராஜ் மாவட்டத்தில் கல்குவாரி பணிகள் நடைபெற்று வருகிறது. கேரளாவை சேர்ந்த ஹகீம் என்பவர் அரசின் அனுமதி பெற்று குத்தகையின் அடிப்படையில் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த கல்குவாரியில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கேரளாவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலார்கள் வேலை செய்து வருகின்றனர்.
கல்குவாரியில் பாறைகள் வெடி வைத்து கற்களாக மாற்றி பொக்லைன் எந்திரங்களின் மூலம் லாரிகளில் ஏற்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கல்குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கும் பணி நடைபெற்றது. அப்போது, ஏற்பட்ட திடீர் அதிர்வால், யாரும் எதிர்பாராத விதமாக குன்றின் மேலிருந்த பெரிய பாறை உருண்டு கீழே சரிந்தது. இதனால் கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் பாறையின் அடியில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு மேலும் பாறை அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் பாறையின் அடியில் சிக்கி உயிரிழந்த நிலையில் 5 பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோர் இரண்டாவது நாளாக இன்றும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.