உ.பி.யில் பேருந்து லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி: முதலமைச்சர் இழப்பீடு அறிவிப்பு..!!
30 January 2021, 11:35 amலக்னோ: உத்தர பிரதேசத்தில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் குண்டர்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மொராதாபாத் மற்றும் ஆக்ரா நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், காயமடைந்த நபர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இதேபோன்று உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
0
0