105 வயது பாட்டியைத் தொற்றிய கொரோனா..! அச்சமின்றி போராடி வெற்றி கண்ட பாட்டி..!

13 September 2020, 8:35 pm
Corona_UpdateNews360
Quick Share

கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் 105 வயதான ஒரு பெண் தனது வீட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்ற பின்னர், கொரோனாவிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளார். 
கமலம்மா லிங்கனகவுடா ஹிரேகவுதர் என்ற 105 வயதான பெண் கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கட்டர்கி கிராமத்தைச் சேர்ந்தவர்.

சமீபத்தில் அவருக்கு காய்ச்சல் வந்த நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

நூற்றாண்டும் மேல் வாழ்ந்து வரும் அவருக்கு வேறு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லாததாலும், அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததையும் கருத்தில் கொண்டு, தனது மகனின் இல்லத்தில் வீட்டில் தனிமையில் சிகிச்சை பெற்றார். வயதான பெண் உணவு எடுக்க தயங்கினாலும், அவருக்கு கஞ்சியும் தண்ணீரும் வழங்கப்பட்டன. அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்து குறைவாகவே இருந்தது.

டாக்டராக இருக்கும் அவருடைய பேரன் ஸ்ரீனிவாஸ் ஹயாட்டியின் மேற்பார்வையில் வீட்டில் சிகிச்சை பெற்ற பின்னர், கமலம்மா தற்போது குணமடைந்துள்ளார். அவரது சோதனை அறிக்கைகள் இப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய கமலம்மாவின் பேரன், “பாட்டியின் வயதைக் கருத்தில் கொண்டு இது சவாலானது என்று நான் உணர்ந்தேன். ஆனால் அவருக்கு வேறு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லாததால், அவர் சாதாரண சிகிச்சையில் இருந்தார். பாட்டி இப்போது கொரோனா குறித்து அஞ்சுவோருக்கு ஒரு உத்வேகம் அளித்துள்ளார்.” என்றார்.

இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள ஏராளமான வயதான நோயாளிகளைக் கொன்ற மிகவும் பயங்கரமான கொரோனா வைரஸிலிருந்து மீண்ட மாநிலத்தின் மிக முதுமையான நபர்களில் இவரும் ஒருவராக உள்ளார்.

Views: - 9

0

0