ஜூலை முதல் 11 லட்சம் நிறுவனங்கள் பதிவு..! இரண்டாமிடத்தில் தமிழகம்..! மத்திய அரசு தகவல்..!

7 November 2020, 4:31 pm
msme_textiles_updatenews360
Quick Share

2020 ஜூலை 1 முதல் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்.எஸ்.எம்.இக்கள் மத்திய எம்.எஸ்.எம்.இ அமைச்சகத்தின் ஆன்லைன் முறையான உதயம் போர்ட்டல் பதிவு செய்முறையில் தங்களை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த பதிவுகளில், 3.72 லட்சம் நிறுவனங்கள் உற்பத்தி பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சேவை துறையின் கீழ் 6.31 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் மைக்ரோ நிறுவனங்களின் பங்கு 93.17% ஆகவும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முறையே 5.62% மற்றும் 1.21% ஆகவும் உள்ளது. 7.98 லட்சம் நிறுவனங்கள் ஆண்களுக்கு சொந்தமானவை மற்றும் 1.73 லட்சம் நிறுவனங்கள் பெண் தொழில்முனைவோர்களால் தொடங்கப்பட்டுள்ளன என்று எம்.எஸ்.எம்.இ. அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிக நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட முதல் ஐந்து துறைகளாக உணவு பொருட்கள், ஜவுளி, ஆடை, பேப்ரிகேஷன் மற்றும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் துறைகள் உள்ளன. இந்த எம்.எஸ்.எம்.இ.க்கள் 1.01 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.

உதயம் போரட்டலில் பதிவு செய்த ஐந்து முன்னணி மாநிலங்கள் முறையே மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் உள்ளன.

ஜூலை 1’ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆன்லைன் பதிவு செயல்முறை இதுவரை எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக இயங்கி வருவதாக அமைச்சகத்தின் அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது. தொழில் முனைவோர் தங்கள் நிறுவனங்களை போர்ட்டலில் பதிவு செய்யுமாறு அமைச்சகம் வலியுறுத்தியது. அதற்கான பதிவு பான் கார்டு இல்லாதவர்களுக்கு மார்ச் 31, 2021 வரை அனுமதிக்கப்படுகிறது.

இதேபோல், ஜிஎஸ்டி எண் இல்லாமல் பதிவு செய்வதும் ஒரு இடைக்கால ஏற்பாட்டின் கீழ் அதே காலக்கெடு வரை அனுமதிக்கப்படுகிறது.

“முதன்முதலில், இந்த போர்டல் சிபிடிடி மற்றும் ஜிஎஸ்டி நெட்வொர்க்குகள் மற்றும் ஜிஇஎம் உடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பின் மூலம், இப்போது எம்.எஸ்.எம்.இ பதிவு முற்றிலும் காகிதமற்ற முறைக்கு மாறியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளலாம். ” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன் அனைத்து கள நிறுவனங்களான எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ தொழில்நுட்ப மையங்கள், என்.எஸ்.ஐ.சி, கே.வி.ஐ.சி, காயிர் போர்டு போன்றவற்றுக்கு உதயம் பதிவு செய்வதற்கான தொழில்முனைவோருக்கு முழு ஆதரவையும் வழங்குமாறு அறிவுறுத்தியது. 

இதேபோல், அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கைத்தொழில் மையங்களும் எம்.எஸ்.எம்.இ.க்கள் மூலம் பதிவை விரைவுபடுத்துமாறு கோரப்பட்டுள்ளன.

பதிவு தொடர்பான எம்.எஸ்.எம்.இ.க்களின் குறைகளை அதன் மத்திய கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் நாடு முழுவதும் 68 மாநில கட்டுப்பாட்டு அறைகளின் நெட்வொர்க் மூலம் சாம்பியன்ஸ் தளத்தால் கையாளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 33

0

0

1 thought on “ஜூலை முதல் 11 லட்சம் நிறுவனங்கள் பதிவு..! இரண்டாமிடத்தில் தமிழகம்..! மத்திய அரசு தகவல்..!

Comments are closed.