11 வயசு பையன் செய்யும் வேலையா இது..? வங்கியிலிருந்து 20 லட்சத்தை அமுக்கிய கில்லாடி சிறுவன்..!
30 September 2020, 5:17 pmஹரியனாவின் ஜிந் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) கிளையிலிருந்து 11 வயது சிறுவன் ரூ 20 லட்சம் திருடியதாகக் கூறப்படுகிறது. வங்கி கிளையில் நுழைந்த சிறுவன் ஊழியர்களிடம் எந்த சந்தேகத்தையும் எழுப்பாமல் 20 லட்ச ரூபாய் பணப்பையுடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட இருவருமே மனோவர் மற்றும் ரவீந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த நாளில், சிறுவன் ஜிந்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு முன்னால் அமைந்துள்ள பி.என்.பி கிளைக்குள் நுழைந்தார். காசாளர் தனது அறையை விட்டு வெளியேறியபோது, 11 வயது சிறுவன் உள்ளே நுழைந்து தனது பணப்பைகளை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அன்று மாலையில், வங்கி ஊழியர்கள் அவர்கள் பெற்ற பணத்தை எண்ணி சரிபார்க்கையில் ரூ 20 லட்சம் வேறுபாட்டைக் கண்டறிந்துள்ளனர். சி.சி.டி.வி காட்சிகளை பரிசோதித்தபோது, 11 வயது சிறுவன் பணத்துடன் வங்கியில் இருந்து வெளியேறிவிட்டது தெரியவந்தது.
சிறுவன் தலா ரூ 5 லட்சம் கொண்ட நான்கு பைகளில் திருடி தப்பி ஓடிவிட்டதாக வங்கி மேலாளர் விஸ்வஜித் சின்ஹா தெரிவித்தார். சம்பவம் நடந்த நாளில் வங்கியில் கூட்ட நெரிசல் இருந்ததால், காசாளர் வெளியேறும்போது தனது அறையை பூட்ட மறந்துவிட்டார் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக வங்கிக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து காவல்நிலைய அதிகாரி ஹரி ஓம், காசாளர் அலட்சியமாக இருந்ததாகக் குற்றம் சாட்டினார். மேலும் அவர் வாஷ்ரூமுக்குச் செல்வதற்கு முன்பு தனது அறையை பூட்டியிருக்க வேண்டும் என்று கூறினார்.
முழு சம்பவமும் வங்கியில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளதாக ஹரி ஓம் மேலும் தெரிவித்தார். காட்சிகளில், சிறுவனும் இன்னொரு மனிதனும் ஒரு பையுடன் வங்கியிலிருந்து பணப்பையுடன் வெளியே செல்வதைக் காணலாம். இதையடுத்து அடையாளம் தெரியாத ஒரு சிறுவன் உட்பட இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.