அடேங்கப்பா… காணாமல் போன 117 இருசக்கர வாகனங்கள் கண்டுபிடிப்பு.. 11 பேர் கைது : ஆந்திர போலீசார் அதிரடி!!

Author: Udayachandran
3 August 2021, 6:53 pm
117 Two Wheelers Seized - Updatenews360
Quick Share

ஆந்திரா : சித்தூர் மாவட்டத்தில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 117 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்த போலீசார் 11 பேரை கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடிக்கடி இரண்டு சக்கர வாகன திருட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. மோட்டார் சைக்கிள்களை திருடுபவர்களை கண்டுபிடிப்பதற்காக சித்தூர் மாவட்ட போலீசார் நான்கு சிறப்பு குழுக்களை அமைத்து ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காணாமல் போன மோட்டார்சைக்கிள்கள் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்கள் சென்னை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் இருப்பது தெரியவந்தது.

விசாரணை முடிவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 107 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகிவற்றை கண்டுபிடித்து பறிமுதல் செய்த போலீசார் சென்னை வேலூர் மற்றும் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் 11 பேரை கைது செய்தனர்.

Views: - 226

0

0