‘நிங்களோட மனசு அடைச்சு மூடி கெடக்கது…! ராகுல் பேச்சை மொழி பெயர்த்து அப்ளாஸ் வாங்கிய கேரள மாணவி!

5 December 2019, 7:38 pm
Quick Share

வயநாடு: கேரளாவில் ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கேரளாவின் வயநாடு தொகுதி எம்பியாக இருப்பவர் காங்கிரசின் எம்பி ராகுல் காந்தி. தமது தொகுதிக்கு வந்த அவர், கருவாராக்குண்டு என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கு வந்தார்.

அங்குள்ள பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் உரையாற்ற முற்பட்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் எமது பேச்சை யாராவது மொழி பெயர்க்க முடியுமா என்றார்.

வழக்கமாக ராகுல் பேச்சை அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மொழி பெயர்ப்பது வழக்கம். தமிழகம் வந்த போது கே.வி. தங்கபாலுவின் மொழிபெயர்ப்பு என்னானது என்று அனைவருக்கும் தெரியும்.

ராகுலின் பேச்சை கேட்ட 12ம் வகுப்பு மாணவி சபா செபின் மொழிபெயர்க்க தயார் என்றார். ராகுலும் பேச ஆரம்பித்தார். மிக தெளிவாக மலையாளத்தில் மொழி பெயர்க்க கூட்டம் ஆர்ப்பரித்தது.

தமது உரையை முடித்த ராகுல் காந்தி மாணவியை பாராட்டி அவருக்கு ஒரு சாக்லேட்டையும் வழங்கினார். மாணவியின் மொழிபெயர்ப்பை பள்ளி நிர்வாகமும் பாராட்டியது.