13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை..! உத்தரப்பிரதேசத்தை உலுக்கிய கோரச் சம்பவம்..!
16 August 2020, 12:57 pmஉத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியைச் சேர்ந்த இசனகரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி வெள்ளிக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரது உடல் இசனகரில் உள்ள கரும்பு வயலில் இருந்து மீட்கப்பட்டது.
லக்கிம்பூர் கெரி காவல்துறை கண்காணிப்பாளர் சத்யேந்திர குமார், கொலை மற்றும் கூட்டு பாலியல் பலாத்கார குற்றங்களின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கற்பழிப்பு குறித்து உறுதி செய்துள்ளதாக குமார் கூறினார்.
“13 வயதுடையவரின் உடல் இசனகரில் கரும்பு வயலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கற்பழிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. சந்தோஷ் யாதவ் மற்றும் சஞ்சய் கௌதம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.” என்று குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) மற்றும் பிரிவு 376 (டி) (கூட்டு கற்பழிப்பு) ஆகியவற்றின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எஸ்.பி. சத்யேந்திர குமார் கூறினார்.