சகோதரிகளின் படிப்பிற்காக டீ விற்கும் 14 வயது சிறுவன்!!

30 October 2020, 2:27 pm
14 years Boy - Updatenews360
Quick Share

மும்பையை சேர்ந்த 14 வயது சிறுவன் தன் தாயாருக்கு உதவியாக தேநீர் விற்று வருகிறார். 12 வருடங்களுக்கு முன்பே தந்தை இறந்துவிட, தவித்து வந்த சுபனின் தாய் வாழ்க்கை நடத்த போராடினார்.

தனியார் பள்ளி பேருந்து ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்த அவர், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் தவித்தார். இதனால் வருமானம் இன்றி வறுமையில் வாடித் தவித்தனர் சுபன் குடும்பத்தினர்.

சுபனுக்கு இரு சகோதரிகள் இருப்பதால் அவர்களின் படிப்பு பாதிப்படைய கூடாது என்பதற்காக சுபன் டீ விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சகோதரிகளின் ஆன்லைன் வகுப்புக்காக அன்றாடம் டீ விற்று சம்பாதிக்கும் மாணவனின் வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சொந்தமாக கடையில்லாதல், மும்பை பேந்தி பஜார் பகுதியில் உள்ள ஒரு கடையில் தினமும் டீ போட்டு, அதை அப்பகுதியில் இல்லாமல் மற்ற பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

ஒரு நாளில் 300 ரூபாய் 400 ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும், தினமும் பணத்தை வீட்டில் கொடுத்து தாயாருக்கு உதவி வருவதாக பெருமையுடன் கூறுகிறார்.

மேலும் கிடைக்கும் தொகையை சேமித்து வருவதாகவும், பள்ளிகள் திறந்த பின் தனது படிப்பை மீண்டும் தொடரப்போவதாக நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார் சிறுவன்.

Views: - 20

0

0