பீகாரில் விஷ சாராயம் குடித்து 16 பேர் பலி: துணை முதல்வர் நேரில் ஆறுதல்

17 July 2021, 11:38 pm
Quick Share

விஷ சாராயம் குடித்ததில் நேற்று 8 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் இன்றைக்கு பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருக்கிறது.

பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் சிலர் திடீர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்ததில் அவர்கள் விஷ சாராயம் சாப்பிட்டுள்ளது தெரியவந்தது. ஆனால் அவர்களோ அவரது குடும்பத்தினரோ யாரும் விஷ சாராயம் சாப்பிட்ட தகவலை சொல்ல மறுக்கின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 8 பேர் நேற்று உயிரிழந்தனர். இன்றைக்கு பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருக்கிறது.இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது போலீஸ். இந்த சம்பவம் குறித்து துணை முதல்வர் ரேணு தேவி, அதிகரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி உள்ளூர் வாசிகள் எதுவும் பேச மறுக்கின்றனர். அதுதான் கவலை அளிக்கிறது. நிலைமையை கவனித்து வருகிறோம். விரைவில் சரியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 80

0

0