தந்தை, தங்கையை கொன்று 16 வயது சிறுமி கூட்டுப்பாலியல் : 6 அரக்கன்கள் கைது!!
4 February 2021, 11:27 amசத்தீஸ்கர் : 16 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் செய்து 3 பேரை கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தல் 16 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் நாசம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுமியை கற்களால் தாக்கி அடித்து கொலை செய்தனர்.
அந்த சிறுமியுடன் இருந்த அவரது தந்தை மற்றும் 4வயது சிறுமியும் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் குற்றவாளிகள் 6 பேரை அடையாளம் காணப்பட்டு கைது செய்தனர்.
கொடூரன்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 3 பேரையும் கொலை செய்து மலையடிவாரத்தில் வீசப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் 6 பேர் மீது வன்கொடுமை, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
0
0