உத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..!!

Author: Aarthi
28 July 2021, 8:38 am
Quick Share

லக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார் தொழிலாளர்கள் 18 பேர் உயிரிழந்தனர்.

ஹரியானாவில் பணிபுரிந்த பீஹாரை சேர்ந்த தொழிலாளர்கள், பேருந்து மூலம் சொந்த ஊருக்கு திரும்பினர். பேருந்து உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் ராம் சனேஹி காட் பகுதியில் வந்த போது பழுது ஏற்பட்டது. இதனையடுத்து, பேருந்தை ஓரங்கட்டிய ஓட்டுநர் பயணிகளை ஓய்வெடுக்க கூறிவிட்டு பழுதை சரி செய்யும் முயற்சியில் இறங்கினார்.

நள்ளிரவு என்பதால் பேருந்தின் முன்பக்கத்தில் தொழிலாளர்கள் பலர் படுத்து உறங்கியுள்ளனர். அதிகாலை 1.30 மணியளவில் பேருந்தின் பின்புறம், அசூர வேகத்தில் வந்த டிரக் ஒன்று மோதியுள்ளது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தின் முன்பக்கத்தில் உறங்கி கொண்டு இருந்த தொழிலாளர்கள்18 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 165

0

0