19 வயது இளம்பெண்ணை காரில் கடத்திய கும்பல்… விடிய விடிய ஓடும் காரில் கதற கதற கூட்டு பலாத்காரம் ; நாட்டை உலுக்கிய சம்பவம்!!

Author: Babu Lakshmanan
31 March 2023, 9:48 pm
Quick Share

பெங்களூரூவில் இளம்பெண்ணை காரில் கடத்தி இரவு முழுவதும் இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரூ கோரமங்களா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் ஊரியராக பணியாற்றி வருகிறார். அந்த இளம்பெண், கடந்த 25ம் தேதி இரவு நேஷனல் ஹோம்ஸ் பார்க்கில் தனது நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 4 பேர், அந்த இளம்பெண்ணின் நண்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், அந்தப் பெண்ணை காரில் கடத்திச் சென்று இரவில் இருந்து மறுநாள் அதிகாலை வரை பெங்களூரு நகர் முழுவதும் சுற்றியுள்ளனர். அப்போது, காருக்குள் வைத்தே இளம்பெண்ணை 4 வாலிபர்களும் மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில், பலத்த காயமடைந்த அந்த இளம்பெண்ணை காரில் இருந்து இறக்கிவிட்டு விட்டு, அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர், அங்கிருந்தவர்கள் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து கோரமங்களா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சதீஸ், விஜய், ஸ்ரீதர், கிரண் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களில் 2 பேர் தனியார் அலுவலகம் ஒன்றில் தொழிலாளியாகவும், ஒருவர் கால் சென்டரிலும், மற்றொருவர் எலெக்ட்ரீசியனாகவும் வேலை பார்த்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணிடமும் விசாரித்து தகவல்களை பெற்றுள்ளனர். கைதான 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Views: - 114

0

0