நீட் மாணவர்கள் கவனத்திற்கு: 2021 தேர்வு முறையில் முக்கிய மாற்றம்….தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!!

14 July 2021, 3:22 pm
Quick Share

இளங்கலை நீட் தேர்வில் சில முக்கிய மாற்றங்களை செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது

நடப்பாண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பிக்கும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது. மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், மத்தியக் கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்காகக் குவைத்தில் இந்த ஆண்டு புதிய தேர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.

NEET_2021_UpdateNews360

கொரோனா வைரஸ் பரவலால் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்கள் எண்ணிக்கை 155இல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட உள்ளன.

இந்நிலையில் நீட் வினாத்தாள் முறையில் மாற்றம் செய்யப்படுவதாக தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. வழக்கமாக நீட் தேர்வு வினாத்தாளில், 180 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம், 720 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

neet - updatenews360

ஆனால், புதிய முறையின் படி, நீட் தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 4 பாடங்களுக்கும் பாடவாரியாக ஏ பிரிவில் 35 கேள்விகளும், பி பிரிவில் 15 கேள்விகளும் இடம்பெறும். நான்கு பாடங்களுக்குத் தலா 50 கேள்விகள் வீதம், மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற உள்ளன.

அத்துடன், முதன்முறையாக, விருப்ப முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் என ஒவ்வொரு பாடத்திலும், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும், அதாவது 35 கேள்விகளுக்கும், பி பிரிவில் இடம்பெற்றுள்ள 15 கேள்விகளில் ஏதேனும் 10 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும். குறிப்பாக பி பிரிவில் கேட்கப்பட்டுள்ள 15 கேள்விகளில், நன்றாக விடை தெரிந்த 10 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்விகளுக்கு தவறான விடையைத் தேர்வு செய்தால், அது மைனஸ் மதிப்பெண்ணாகக் கருதப்பட்டு, ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். அதேபோல பதில் அளிக்காவிட்டால், அதற்கு நெகட்டிவ் மதிப்பெண் அளிக்கப்படாது என்ற பழைய நடைமுறை அப்படியே உள்ளது.

Views: - 168

0

0