இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சம்..!

15 August 2020, 11:26 am
Cbe Corona - Updatenews360
Quick Share

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டிவிட்டது.

நாடு முழுவதும் கொரோனா பரவல்  கட்டுக்குள் வரவில்லை. தினசரி பாதிப்பு விகிதம் அதிகரித்து கொண்டே வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆனாலும் தொற்று பரவல் குறையவில்லை. பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 65,002 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

அதேபோல், 996 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துவிட்டது. ஒட்டு மொத்தமாக இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 49036 ஆக இருக்கிறது.

மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு 6,61,695 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 18,08,936 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் பெற்று இருக்கின்றனர்.

பாதிப்புகள், பலி எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் கொரோனா தொற்றின் முன்கள பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

Views: - 39

0

0