மேற்கு வங்கத்தை அச்சுறுத்தும் காய்ச்சல்: 3 குழந்தைகள் பரிதாப பலி…60 குழந்தைகளுக்கு சிகிச்சை…!!

Author: Aarthi Sivakumar
17 September 2021, 8:58 am
Quick Share

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் காய்ச்சல் பாதிப்புக்கு 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் மால்டா மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். 60 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

130 குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு! – மேற்கு வங்கத்தில் பரபரப்பு  | Webdunia Tamil

இதுதவிர, மால்டா மாவட்டத்தின் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு இருமல் உள்ளிட்ட வேறு சில பாதிப்புகளும் காணப்படுகின்றன. இதனால், மருத்துவமனையில் தொடர்ந்து பெற்றோர் குவிந்து வருகின்றனர்.

கொரோனா 3வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மேற்கு வங்காளத்தில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 203

0

0