அடைக்கலம் நாடி இந்தியாவுக்குள் நுழைந்த மியான்மர் போலீசார்: மிசோரமில் பரபரப்பு…!!

5 March 2021, 8:36 am
myanmar mizoram - updatenews360
Quick Share

புதுடெல்லி: மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 போலீசாரை அந்த மாநில போலீசார் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக அங்கு பல கட்ட தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 50க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

myanmar-policemen-updatenews360

இத்தகைய பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 போலீசாரை அம்மாநில போலீசார் நேற்று பிடித்தனர். இரு நாட்டு எல்லையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள லங்காவ் கிராமத்தில் சாதாரண உடையில் அவர்கள் சிக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது, மியான்மர் ராணுவம் இட்ட கட்டளைகளை தாங்கள் நிறைவேற்றாததால், தங்களை ராணுவம் தேடுவதாகவும், எனவே இந்தியாவிடம் அடைக்கலம் பெறுவதற்காக எல்லை தாண்டி வந்ததாகவும் தெரிவித்தனர்.

பிடிபட்ட 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராணுவத்துக்கு பயந்து மியான்மர் போலீசார் இந்தியாவுக்குள் ஊடுருவிய விவகாரம் மிசோரமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 25

0

0