மூத்த அக்காக்களுக்கு ஏற்கனவே அரசு வேலை… இளைய சகோதரிகள் 3 பேர் ஒரே அரசுத் தேர்வில் வெற்றி : சாதித்த விவசாய குடும்பம்!!

15 July 2021, 6:27 pm
rajastan sisters - updatenews360
Quick Share

ராஜஸ்தானில் ஒரு விவசாயியின் இருமகள்கள் அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் இருந்து வரும் நிலையில், அவரது மேலும் 3 மகள்கள் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சாதேவ் சஹாரன் என்பவருக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகள்களான ரோமா மற்றும் மஞ்சு ஆகியோர் ஆர்ஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் இருந்து வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆர்ஏஎஸ் தேர்வை விவசாயி சஹாரனின் கடைசி மூன்று மகள்களான அன்ஷு, ரீது மற்றும் சுமன் ஆகியோரும் எழுதினர்.

இந்த நிலையில், இந்தத் தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. அதில், அவரது மூன்று மகள்களும் தேர்ச்சி பெற்று விவசாயியான தனது தந்தைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அரசுப் பணிக்கான தேர்வில் சகோதரிகள் 3 பேரும் தேர்ச்சி பெற்றதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்களும் அரசுத் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணியாற்ற இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதனிடையே, சகோதரிகள் மூவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

Views: - 137

0

0