3 மாடிக் கட்டடம் அடியோடு விழுந்து தரைமட்டம் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்பு வாசிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan8 October 2021, 3:52 pm
கர்நாடகா : பெங்களூரு கஸ்தூரி நகர் பகுதியில் உள்ள மூன்று மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கஸ்தூரி நகர் பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தின் அடித்தளம் பலமில்லாமல் இருந்தது. இதனால் கட்டடம் இடிந்து விழுக்கூடிய அபாயத்தில் இருந்தது.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள 8 பிளட்டுகளில் மூன்று பிளாட்டுகளில் மட்டுமே குடியிருந்த மக்கள் உடனடியாக கட்டடம் இடிந்து விழக்கூடும் என முன்னெச்சரிக்கையாக வெளியேறினர்.
இதையத்து நேற்று மூன்று மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தது. முன்னதாகவே மக்கள் வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் கட்டடம் இடிந்து தரைமட்டமாகும் வீடியோ இணையத்தில் வேகமாய் பரவி வருகிறது.
0
0