3 வேளாண் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு : நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 8:51 am
Bharath Bandh- Updatenews360
Quick Share

டெல்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் விவசாய சங்கத்தினர் போராடி வருகின்றனர்.

வேளாண் சட்டம் சிலருக்கு சாதகமாக இருப்பதாக விவசாய சங்க அமைப்புகள் குற்றட்சாட்டி வருகின்றனர். ஆனால் இது விவசாயிகளுக்கு நலன் தரும் சட்டம் என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் விவசாயிகளின் போராட்டம் பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது.
இன்று நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. உ பி.,யில் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ்கட்சி, பஞ்சாபில் சில கட்சியினர், விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

டில்லி, பஞ்சாப், அரியானா, வில் ஒரளவுக்கு ஆதரவு உள்ளது. டில்லியில் கூடுதல் பாதுகாப்பு போலீசார் ரோந்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை இடதுசாரிகள், மக்கள் நீதி மய்யம் கட்சி தவிர எந்த கட்சியினரும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இடதுசாரி தரப்பில் ரயில் மறியல் ஆர்ப்பாட்டம் என போராட்டம் நடத்தி வருகின்றனர். கடைகள் எதுவும் தமிழகத்தில் அடைக்கப்படவில்லை.

Views: - 115

0

0