தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

Author: Udhayakumar Raman
31 August 2021, 9:44 pm
Quick Share

தமிழகத்திற்கு தர வேண்டிய 30.6 டிஎம்சி காவிரி நீரை வழங்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. அதற்கு, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர் ஏற்கனவே காவிரியில் திறந்து விட்டுள்ளோம் என கர்நாடகா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நிரம்பிவிடக்கூடாது என்பதால் உபரி நீர் திறந்து விடப்பட்டது என தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்கு தர வேண்டிய 30.6 டி.எம்.சி நிலுவையை உடனே திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்னீரையும் காவிரியில் உடனே திறந்து விடவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 141

0

0