எல்லை தாண்டி மீன்படித்ததாக 31 இந்திய மீனவர்கள் கைது : பாகிஸ்தான் கடற்படை அட்டூழியம்

Author: kavin kumar
20 February 2022, 9:40 pm
Quick Share

இந்திய மீனவர்கள் 31 பேரையும் அவர்களின் படகையும் பாகிஸ்தான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 31 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன்படித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் 5 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஊடுருவிய படகுகளை நேற்று முன்தினம் பறிமுதல் செய்ததாக பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

படகுகள் அனைத்தும் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைக்காக கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரபிக்கடல் பகுதியில் எல்லை தாண்டி வருவதாக பாகிஸ்தானும் இந்தியாவும் அடிக்கடி இது போன்ற கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆண்டு துவக்கத்தில் இரு நாடுகளும் பகிர்ந்து கொண்ட கைதிகளின் பட்டியலின் படி, பாகிஸ்தானில் 628 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதில் 577 பேர் மீனவர்கள் ஆவர்.

Views: - 398

0

0