350 மீட்டர் நீளத்தில் தேசியக் கொடி : 75வது சுதந்திர தினத்தையொட்டி மாணவர்கள் நடத்திய தேசபக்த ஊர்வலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2022, 7:40 pm
350 Mtr Flag - Updatenews360
Quick Share

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 350 மீட்டர் நீள தேசியக் கொடியுடன் மாணவ மாணவிகள் ஊர்வலம்.

நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை முன்னிட்டு 75வது சுதந்திர தினத்தை சிறப்பாகவும், விரிவாகவும் கொண்டாட தேவையான ஏற்பாடுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த மாணவ, மாணவிகள் 350 மீட்டர் நீள தேசியக் கொடியுடன் நகரில் இன்று ஊர்வலமாக சென்றனர்.

நிகழ்ச்சியை காக்கிநாடா நகர மேயர் சிவ பிரசன்னா துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதியில் வழியாக எடுத்து செல்லப்பட்ட 350 மீட்டர் நீள தேசியக்கொடி ஊர்வலம் நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.

Views: - 119

0

0