காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை..! 8 நாளில் சைக்கிளில் கடந்து மகாராஷ்டிர சிறுவன் சாதனை..!

21 November 2020, 10:12 pm
Om_Mahajan_UpdateNews360
Quick Share

17 வயதாகும் ஓம் மகாஜன் இந்தியா முழுவதும் வேகமாக சைக்கிள் பயணம் செய்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நாசிக் நகரில் வசிக்கும் மகாஜன், ஸ்ரீநகரில் இருந்து கன்னியாகுமரி வரை 3,600 கி.மீ தூரத்தை மிதிவண்டியில் எட்டு நாட்கள், ஏழு மணி மற்றும் 38 நிமிடங்களில் கடந்து, இன்று பிற்பகல் புதிய சாதனை படைத்துள்ளார்.

“நான் எப்போதுமே சைக்கிள் ஒட்டிக்கொண்டு இருந்தேன், ஆனால் அது வேகமாக ஓடுவதைப் பற்றியது. ஊரடங்கு தொடங்கியபின் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ரேஸ் அக்ராஸ் அமெரிக்கா ஆகியவற்றில் பங்கேற்க வேண்டும் என்று கனவு காணத் தொடங்கினேன்” என்று கன்னியகுமாரியை அடைந்த பிறகு ஓம் மகாஜன் கூறினார்.

“சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, நவம்பர் மாதத்தில் நடக்கவிருந்த ரேஸ் அக்ராஸ் அமெரிக்காவுக்க்கான தகுதிச் சுற்றில் கலந்து கொள்ள பயிற்சியைத் தொடங்கினேன்.” என்று அவர் கூறினார்.

ஆனால் நிலையான 600 கி.மீ தகுதிச் சுற்றுக்கு செல்வதை விட, ஓம் மகாஜன் தன்னை ஒரு ‘ரேஸ் அக்ராஸ் இந்தியா’ என்று பெயர் பெற்றுள்ளார்.

அவர் கடந்த வாரம் ஸ்ரீநகரில் இருந்து ஒரு குளிர்ந்த இரவில் தனது பயணத்தை தொடங்கினார். மேலும் மத்திய பிரதேசத்தில் பலத்த மழை பெய்து பயணத்தில் தடங்களை ஏற்படுத்தினாலும், இலக்கை அடைவதற்கு விடாமல் முன்னேறிக் கொண்டே வந்தார்.

ஸ்ரீநகரிலிருந்து கன்னியாகுமரி வரை வேகமாக சைக்கிள் ஓட்டுவதற்கான தற்போதைய கின்னஸ் புத்தக பதிவு அவரது மாமா மகேந்திர மகாஜனால் உள்ளது.

இருப்பினும், அந்த சாதனையை அண்மையில் இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் கேணல் பாரத் பன்னு முறியடித்தார், அவர் எட்டு நாட்கள் மற்றும் ஒன்பது மணி நேரத்தில் இந்த தூரத்தை கடந்தார். ஆனால் இது கின்னஸ் புத்தகத்தில் இன்னும் சேர்க்கப்படவில்லை.

அதற்குள் தற்போது அந்த சாதனை ஓம் மகாஜனால் முறியடிக்கபப்ட்டு விட்டது. இந்நிலையில்,அவரது சாதனைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Views: - 26

0

0

1 thought on “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை..! 8 நாளில் சைக்கிளில் கடந்து மகாராஷ்டிர சிறுவன் சாதனை..!

Comments are closed.