குளக்கரையில் விளையாடிய சிறுவர்கள் நீரில் மூழ்கிய பரிதாபம்: ஒருவர் பின் ஒருவராக 4 பேர் உயிரிழந்த சோகம்…!!

Author: Aarthi Sivakumar
15 October 2021, 1:55 pm
Quick Share

ஆந்திரா: விஜயவாடாவில் குளத்திற்கு குளிக்க சென்ற 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா அடுத்த கைக்கலூர் பகுதியில் உள்ள குளத்தின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். 3 சிறுமிகள் மற்றும் 1 சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவர்கள் குளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கிடைத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறையினர் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

நீண்ட நேரத்திற்குப் பின், மூன்று சிறுமிகள், மற்றும் ஒரு சிறுவன் என நான்கு பேரின் உடல்கள் குளத்திலிருந்து மீட்கப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 457

0

0