அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல் : தம்பதிக்கு வலை வீசும் போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2021, 2:47 pm
Baby Kidnap -Updatenews360
Quick Share

ஆந்திரா : குண்டூர் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அதே ஊரை சேர்ந்த பிரியங்காவுக்கு கடந்த 13 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. நேற்று இரவு குழந்தையின் பாட்டி அவனை அருகில் படுக்க வைத்து தூங்கிக்கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை.

இதுபற்றி காணாமல் போன குழந்தையின் தந்தை மகேஷ் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவு காட்சிகளில் காணப்படும் ஒரு ஆண், ஒரு பெண் ஆகியோர் மருத்துவமனை வளாகத்திற்குள் சந்தேகம் அளிக்கும் வகையில் நடமாடி கொண்டிருந்ததாகவும் அந்த ஆண் எடுத்து செல்லும் கைப்பைக்குள் வைத்து குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற தகவல்களை திரட்டும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Views: - 237

0

0