லக்கிம்பூர் விவசாயிகள் வன்முறை சம்பவம்: மேலும் 4 பேர் கைது…தோட்டாக்களுடன் துப்பாக்கி பறிமுதல்..!!

Author: Aarthi Sivakumar
19 October 2021, 3:42 pm
Quick Share

லக்னோ: லக்கிம்பூர் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது கார் மோதியதால் வன்முறை வெடித்தது. இதில், 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

Lakhimpur Kheri, Violence, Four Arrested, BJP Worker, லக்கிம்பூர், வன்முறை, 4 பேர், கைது

நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவ்வழக்கு தொடர்பாக சிலரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒரு நபரான சத்ய பிரகாஷ் திரிபாதி என்பவரிடம் தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லகிம்பூர் கேரி வன்முறை: மத்திய மந்திரியின் மகன் விரைவில் கைது?||Lakhimpur  Kheri Violence: MoS Home's Accused Son Ashish Mishra Detained By UP Police  -DailyThanthi

இதனையடுத்து இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 242

0

0