நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி புகுந்து கலர் புகைக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தின் 22ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், வழக்கம் போல குளிர்காலக் கூட்டத் தொடருக்கான இரு அவைகளும் இன்று காலை கூடியது. அப்போது, மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அத்துமீறி எம்பிக்கள் அமரும் பகுதிக்குள் 2 பேர் நுழைந்துள்ளனர்.
மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து கலர் புகைக்குண்டுகளை மர்ம நபர்கள் வீசியதால் பரபரப்பு நிலவியது. எம்பிக்களின் இருக்கைகள் மீது ஏறி குதித்து கூச்சலிட்ட இருவரையும் அவை காவலர்கள் மடக்கி பிடித்தனர். 2 மர்மநபர்கள் அத்துமீறி நுழைந்ததால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், இரு மர்ம நபர்கள் மக்களவைக்கு புகுந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
இதனிடையே, நாடாளுமன்றத்திற்குள் புகுந்த சம்பவம் தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த நீலம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனமோல் ஷிண்டே மற்றும் சாஹர் என்பவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மைசூரைச் சேர்ந்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, இவர்களை பார்வையாளர்களாக அனுமதிக்கக்கோரிய பரிந்துரை கடிதம் கிடைத்தது.
இதனால், அவருக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே, பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.