“ஷாக்”..! இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பின்னரும் கொரோனா பாதிப்பு..! லக்னோவில் 40 மருத்துவர்களுக்கு தொற்று உறுதி..!

7 April 2021, 7:45 pm
King_George's_Medical_University_UpdateNews360
Quick Share

லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (கேஜிஎம்யு) கொரோனா வைரஸ் தொற்றுக்கு துணைவேந்தர் லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) விபின் பூரி உட்பட 40 மருத்துவர்கள் ஆளாகியுள்ளனர். 

விவரங்களின்படி, மார்ச் 25 அன்று துணைவேந்தருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

நிலைமை குறித்து கே.ஜி.எம்.யுவின் சந்தீப் திவாரி கூறுகையில், “கடந்த நான்கு நாட்களில், மருத்துவ கண்காணிப்பாளர் ஹிமான்ஷு உட்பட சுமார் 40 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.” என்றார்.

தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மருத்துவர்களில் பொது அறுவை சிகிச்சை துறையைச் சேர்ந்த 20 பேரும், சிறுநீரகத் துறையைச் சேர்ந்த ஒன்பது பேரும், பொது மருத்துவத் துறையைச் சேர்ந்த மூன்று பேரும் அடங்குவர்.

முன்னதாக நேற்று, இன்ஃப்ளூயன்ஸா போன்ற அறிகுறிகளைப் புகார் செய்த பின்னர் பல ஆசிரிய உறுப்பினர்களுக்கும் சோதனைகள் நடத்தப்படுகின்றன. அவற்றின் அறிக்கைகள் பின்னர் கிடைக்கும்.

இந்நிலையில் மருத்துவமனையின் பல துறைகளில் முழு ஊழியர்களையும் சோதனை செய்யும் பணி தொடங்கப்படுகிறது.

முன்னதாக, சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம், மேடந்தா மருத்துவமனை மற்றும் எரா மருத்துவக் கல்லூரித் தலைவர்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்ட பின்னரும் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0