மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 4,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

13 November 2020, 10:04 pm
Quick Share

மகாராஷ்டிராவில் இன்று 4 ஆயிரத்து 132 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் பெருமளவு குறைந்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, மாநிலத்தில் இன்று 4 ஆயிரத்து 132 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 40 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 543 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 9 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 16

0

0