கர்நாடகாவை கதிகலங்க வைக்கும் கொரோனா: ஒரே நாளில் 41,664 பேருக்கு தொற்று உறுதி..!!

15 May 2021, 8:14 pm
Corona_Bangalore_UpdateNews360
Quick Share

பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 41,664 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 34,425 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 349 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்புடன் 6 லட்சத்து 05 ஆயிரத்து 494 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து 15 லட்சத்து 44 ஆயிரத்து 982 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக 21,434 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Views: - 125

0

0