5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் : முன்னிலையில் பாஜக.. பஞ்சாப்பில் திருப்புமுனை.. பரிதாப நிலையில் காங்கிரஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2022, 8:51 am
5 State Election Results - Updatenews360
Quick Share

உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதே போல உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதியும், பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. மேலும்,மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில், உ.பி, கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மின்னணு வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள்,பஞ்சாப்பில் 117 தொகுதிகள்,மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில்,பிற்பகலுக்குள் முன்னிலை முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஜூலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல், 2024 மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப்பில் திருப்புமுனையாக ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. உத்தரகாண்ட், மணிப்பூர் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது-. கோவாவில் மட்டும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

Views: - 666

0

0