காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…2 ராணுவ வீரர்கள் வீரமரணம்..!!

9 July 2021, 2:28 pm
Quick Share

ஸ்ரீநகர்: காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் இருவேறு இடங்களில் நடந்த மோதலில், 5 பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலத்திற்குள் புகுந்து, அவ்வப்போது ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் இடங்களை கண்டுபிடித்து, ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Kashmir_Encounter_Terrorists_UpdateNews360

அந்த வகையில், நேற்று காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி பகுதியில் உள்ள தாடல் காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவத்தினரின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி, கையெறி குண்டுகளையும் வீசினர். இதற்கு இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் கொடுத்தனர்.

இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இதில், 2 பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், 2 வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், பெரிய அளவிலான வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன. ரஜோரி மாவட்டத்தின் வேறு பகுதியில் நடந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Views: - 177

0

0