ஐந்து வயது சிறுமி சொந்த மாமாவால் பாலியல் பலாத்காரம்..! உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு சம்பவம்..!

7 October 2020, 7:34 pm
Girl_Rape_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் புடான் மாவட்டத்தின் ஹஸ்ரத்பூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஐந்து வயது சிறுமி தனது மாமாவால் இன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது, சிறுமியை மாமா ஒரு பாழடைந்த இடத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் தப்பி ஓடிவிட்டார். பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள மாமா, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புடான் மூத்த போலீஸ் சூப்பிரண்டு சங்கல்ப் சர்மா தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஹத்ராஸ் கூட்டு பாலியல் பலாத்கார விவகாரம் வெளியானத்திலிருந்து தொடர்ச்சியாக உத்தரபிரதேசத்தில் பெண்களும் சிறுமிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 41

0

0