ஒரே நேரத்தில் 50 வகையான உணவு.. பாஜக செயற்குழுவின் பாராட்டை பெற்ற பெண் : நன்றி கூறிய பிரபல சமையல் கலைஞர் யாதம்மா!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2022, 6:56 pm
Cheff - Updatenews360
Quick Share

ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று மற்றும் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு தயாரித்து பரிமாறும் பணியை தெலுங்கானாவை சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் யாதம்மாவிடம் கட்சியின் மாநில தலைமை ஒப்படைத்து இருந்தது.

இந்த நிலையில் யாதம்மா நேற்றும் இன்றும் பாஜக பிரமுகர்களுக்கு உணவு வழங்கினார். பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தின் நிறைவு நாளான இன்று மதியம் இனிப்புகள் உள்ளிட்ட 50 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.

தெலுங்கானா சமையல் முறைப்படி தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் ஆன துவரம்பருப்பு தக்காளி, ஆலு குருமா, கத்தரிக்காய் மசாலா, தொண்டக்காய் துருவல் பொரியல், ஓக்ரா காஜு கொட்டௌ பொரியல், தோட்டகீரை தக்காளி பொரியல், மில் மேக்கர் கீரை பொரியல், வெந்தயம் பேரீச்சம்பழ பொரியல், மாம்பழம், சாம்பார், பாசிபருப்பு கூட்டு, புளிஹோரா, புதினா சாதம், வெள்ளை சாதம்,தயிர் சாதம், கோங்கூர துவையல், வெள்ளரிக்காய் கடுகு சட்னி, தக்காளி சட்னி, சுரைக்காய் சட்ன, ஜவ்வரிசி பாயசம், சேமியா பாயசம், ,இனிப்பு பூரி உள்ளிட்ட 50 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

இந்த நிலையில் முக்கிய பிரமுகர்களுக்கு உணவு சமைக்கும் பணியை தன்னிடம் ஒப்படைத்த தெலுங்கானா மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் பண்டி சஞ்சய்குமாருக்கு சமையல் கலைஞர் யாதம்மா நன்றி தெரிவித்துள்ளார்.

Views: - 201

0

0