ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சோகம்..!!

29 January 2021, 6:20 pm
auto lorryacc
Quick Share

ஹைதராபாத்: தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், மண்டலத்தின் எர்ரகுந்தா தாண்டா மண்டலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்கள் ஆட்டோவில் வாரங்கலுக்கு ஷாப்பிங் செய்வதற்காக சென்று கொண்டு இருந்தனர்.

மகாபூபாபாத் மாவட்டம் மாரிமிட்டா பகுதியில் சென்று கொண்டு இருந்த போது பின்னால் இருந்து வந்த ஒரு லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். விபத்து தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

லாரியின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. விரைவில் அவரை பிடிப்போம் என போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Views: - 0

0

0