கல்விக்கு தூரம் ஒரு தடையல்ல: ஆன்லைன் வகுப்புக்காக தினமும் 6 கி.மீ, பயணம் செய்யும் 5 வயது சிறுமி..!!!
6 March 2021, 12:30 pmதெலங்கானா: ஆன்லைன் வகுப்பிற்கு இணையத்தை பயன்படுத்த சிக்னல் கிடைக்காததால் 6 வயது சிறுமி ஒருவர் தினமும் 5 கிலோமீட்டர் வரை பயணம் மேற்கொண்டு கல்வி கற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பல விஷயங்களை மாற்றியமைத்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று மாணவர்களின் கல்வி கற்கும் முறை. பள்ளிக்கு சென்று சக மாணவர்களுடன் பழகி செயல்முறை கல்வி கற்ற மாணவர்களை ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் ஒரு செல்போனுக்கு முன்பு கட்டிப்போட்டுள்ளது இந்த கொரோனா. எல்.கே.ஜி மாணவர்களுக்குக் கூட ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது.
வழக்கமாக ஏப்ரல் மாதத்திலேயே சிபிஎஸ்இ பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை தொடங்கிவிடுவர். அதன்பின் மே மாதம் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மே மாதம் விடுமுறை அளிக்கப்பட்டு ஜூன் மாதம் புதிய பாடங்கள் தொடங்கப்படும். ஆனால் இந்த இரண்டு பள்ளிகளுக்குமே கொரோனா லாக்டவுன் செக் வைத்துவிட்டது.
ஆரம்பத்தில் சாதாரணமான வார்த்தையாக இருந்த ஆன்லைன் வகுப்புகள் இப்போது பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள் வரை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன், அதிவேக இண்டர்நெட் வசதி எல்லாம் தேவை. ஆனால் அது அனைத்து வீடுகளிலும் இருப்பதில்லை.
தெலுங்கானாவின் மஞ்சேரியல் மாவட்டத்தின் மோரிகுடாவில் உள்ள தனது பழங்குடி குக்கிராமத்தில் வசித்து வருபவர் 6 வயதான சரஸ்வதி என்ற சிறுமி. சிறுமியின் வீடு இருக்கும் பகுதியில் போதிய இணையவசதி கிடைக்காத காரணத்தினால் ஆன்லைன் வகுப்பிற்காக தினமும், 5 கி.மீ. பயணம் மேற்கொள்கிறார் இந்த சிறுமி. சிக்னல் கிடைக்கும் பகுதியை அடைந்தவுடன் சாலையோரம் இருக்கும் மரத்தின் கீழ் அமர்ந்து பாடம் கற்கிறார்.
கல்விக்கு இணைய வசதியோ, தூரமோ ஒரு தடையாக எப்போதும் அமையாது என்பதை கல்விக் கடவுளின் பெயர் கொண்ட இந்த 6 வயது சரஸ்வதி மெய்ப்பித்துள்ளார் .
0
0