24 மணி நேரத்தில் 600 பேர் உயிரிழப்பு : கர்நாடகாவில் உச்சம் தொடும் அச்சம்!!

8 May 2021, 10:00 am
Karnataka Corona- Updatenews360
Quick Share

கர்நாடகா : கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 600 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 600 ஐ நெருங்கியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரு நிலையில் கடந்த ஒரு நாளில் மட்டும 592 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 147

0

0