அசாமில் ஒரே மாதத்தில் 6வது முறையாக நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3 ஆக பதிவு….கலக்கத்தில் மக்கள்…!!

10 May 2021, 10:28 am
EarthQuake_UpdateNews360
Quick Share

கவுகாத்தி: அசாமில் 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.

அசாமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7.05 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவானது.

நாகோன் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்ததை உணர முடிந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். அசாம் மாநிலத்தில் இந்த மாதத்தில் மட்டும் 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று அதிகாலை சோனித்பூர் பகுதியில் நிலநடுக்கம் 3.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாமில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்கள் அம்மாநில மக்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.

Views: - 127

0

0