அக்.29ம் தேதி தொடங்குகிறது வந்தே பாரத் திட்டத்தின் 7ம் கட்ட சேவை…!!

27 October 2020, 12:34 pm
vandhe barath2 - updatenews360
Quick Share

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 7ம் கட்ட சேவை அக்டோபர் 29ம் தேதி தொடங்க உள்ளது.

புதுடெல்லி: வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து வருவதற்காக ‘வந்தே பாரத்’ திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது உள்நாட்டு விமான சேவையும் இயங்கி வருகிறது.

மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியின் 7ம் கட்டம் அக்டோபர் 29ம் தேதி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில்,

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலமாக திருப்பி அழைத்து வரப்பட்டனர். வந்தே பாரத் திட்டத்தின் 7ம் கட்டம் அக்டோபர் 29ஆம்தேதி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் திருச்சி – மஸ்கட் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானங்களை இயக்குகிறது. நவம்பர் 16ஆம் தேதி திருச்சி-பஹ்ரைன் இடையே சிறப்பு விமானம் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Views: - 17

0

0