“நீலக் கொடி சான்றிதழ் பெற்ற இந்தியாவின் 8 கடற்கரைகள்..! இதிலென்ன சிறப்பம்சம் தெரியுமா..?

Author: Sekar
12 October 2020, 12:43 pm
Puri_Beach_UpdateNews360
Quick Share

இந்திய கடற்கரைகளை கிடைத்த ஒரு பெரிய மரியாதைக்குரிய விஷயமாக, டென்மார்க்கின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளையால் (எப்ஈஈ) சுத்தமான கடற்கரை என அங்கீகரிக்கும் வகையில் நீலக் கொடி சான்றிதழை வென்ற 50 கடற்கரைகளில் இந்தியா இப்போது உள்ளது. 

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ட்விட்டரில் பகிர்ந்த ஒரு செய்தியில், “இந்தியாவின் அமைதியான 8 கடற்கரைகள் மதிப்புமிக்க நீல கொடி சான்றிதழைப் பெறுகின்றன.

இதுபோன்ற இடங்களைப் பாதுகாப்பதற்கும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இந்தியா கொண்டுள்ள முக்கியத்துவத்தை இது காட்டுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 8 கடற்கரைகள் நீலக் கொடி சான்றிதழைப் பெற்றுள்ளன.

நீலக் கொடி சான்றிதழைப் பெற்றுள்ள இந்தியாவில் உள்ள கடற்கரைகள் பின்வருமாறு :

  • கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் காசர்கோடு
  • கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள படுபித்ரி
  • குஜராத்தில் சிவராஜ்பூர்
  • டையூவில் கோக்லா
  • கேரளாவில் கப்பாட்
  • ஆந்திராவில் ருஷிகொண்டா
  • ஒடிசாவின் பூரியில் கோல்டன் பீச்
  • அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் ராதாநகர்

முதன்முறையாக 2018’ஆம் ஆண்டில் இந்தியா நீலக் கொடி சான்றிதழைப் பெறுவதற்கான பணிகளைத் தொடங்கியிருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதுபோன்ற சான்றிதழ்களை 100 கடற்கரைகளுக்கு பெற திட்டமிட்டுள்ளது. 

இந்த மிகப்பெரிய வெற்றியைப் பாராட்டிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஒரே ஒரு முயற்சியில் 8 கடற்கரைகளுக்கு நீலக் கொடி பெற்று இந்தியா உலக அளவில் ஒரு முன்மாதிரியான சாதனையை நிகழ்த்தியுள்ளது என்று கூறினார்.

முன்னதாக செப்டம்பர் மாதம், உயர்மட்ட விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் தேசிய நடுவர் மன்றம் இந்தியாவில் எட்டு கடற்கரைகளை சான்றிதழ் பெற பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

நீலக் கொடி சான்றிதழ் என்றால் என்ன?

நீல கொடி தாங்கும் கடற்கரைகள் உலகின் தூய்மையான கடற்கரைகளாக கருதப்படுகின்றன. இதுவரை, 50 நாடுகளைச் சேர்ந்த 4,664 கடற்கரைகள், மெரினாக்கள் மற்றும் நிலையான படகு சுற்றுலா இயக்குநர்களுக்கு எப்ஈஈ இந்த சான்றிதழை வழங்கியுள்ளது.

ஒரு கடற்கரை சான்றிதழ் பெற தகுதி பெறுவதற்காக சுற்றுச்சூழல், குளிக்கும் நீரின் தரம், கல்வி, பாதுகாப்பு, சேவைகள் மற்றும் அணுகல் தரநிலைகள் தொடர்பான 33 கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

உலகிலேயே ஸ்பெயினில் தான் அதிக அளவு நீலக் கொடி சான்றிதழ் பெற்ற தளங்கள் உள்ளன.

Views: - 103

0

0