ராஜஸ்தானில் பயங்கர விபத்து: டிரக் மீது வாகனம் மோதியதில் 8 பேர் பலி..!!

27 January 2021, 11:42 am
rajastan acc - updatenews360
Quick Share

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் டோங்க் என்ற இடத்தில் டிரக் மீது வாகனம் மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் என்ற இடத்தில் இன்று அதிகாலை டிரக் மீது வாகனம் ஒன்று மோதியது. அதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் தப்பி ஓடிவிட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வட மாநிலங்களில் தற்போது கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. விபத்துக்கு இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

Views: - 0

0

0