டெம்போ மீது அதிவேகத்தில் மோதிய கார்..8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்: ஆஸ்ரமத்திற்கு சென்று திரும்பும் போது சோகம்..!!

Author: Rajesh
3 May 2022, 4:17 pm
Quick Share

லக்னோ: உத்தரபிரதேசத்தில் டெம்போ மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டம் சிலொலி கிராமத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என 15க்கும் மேற்பட்டோர் டெம்போவில் பாடியாலி பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றனர்.

அவர்கள் அனைவரும் ஆசிரமத்திற்கு சென்றுவிட்டு இன்று காலை மீண்டும் சொந்த கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். படோன் – மெயின்புரி நெடுஞ்சாலையில் டெம்போ மீது வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் டெம்போ கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டெம்போவில் பயணித்த 7 பேர், காரில் பயணித்த ஒருவர் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரமத்திற்கு சென்று திரும்பும்போது நடந்த இந்த கோர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 497

0

0