நாடு முழுவதும் பி.எம்., கேர்ஸ் நிதி மூலம் 850 ஆக்சிஜன் ஆலைகள்: ஆக்சிஜன் தட்டுப்பாட்டு தீர்வு காண ஏற்பாடு..!!

Author: Aarthi
15 June 2021, 3:17 pm
Quick Share

புதுடெல்லி: நாடு முழுவதும் 850 இடங்களில் பி.எம்., கேர்ஸ் நிதியில் இருந்து ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று நடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி கூறியதாவது, கொரோனா இரண்டாம் அலையின்போது எங்கள் தரப்பில் பல்வேறு நகரங்களில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.

oxygen_cylinders_updatenews360


கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தேவை ஏற்படும் நிலையில் மேலும் பல நடமாடும் மருத்துவ மனைகள் அமைப்பது உட்பட அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம். மூன்றாம் அலை உருவானால் அந்த நெருக்கடியை எதிர்கொள்ள அனைத்து மருத்துவ மனைகளும் தயாராக உள்ளன. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது.

இரண்டாம் அலை உருவானபோது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 850 இடங்களில் ‘பி.எம்., கேர்ஸ்’ நிதியில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 204

0

0