ஆந்திராவில் மேலும் 8,555 பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 67 பேர் உயிரிழப்பு

2 August 2020, 9:54 pm
Corona_Bed_UpdateNews360
Quick Share

ஐதராபாத்: ஆந்திராவில் மேலும் 8,555 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சில நாட்களாகவே அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று 9,276 பேருக்கு கொரோனா உறுதியானது.

இந் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆந்திராவில் இன்று மேலும் 8,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,58,764 ஆக உள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனாவால் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,474 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 82,886 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 74,404 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Views: - 0

0

0